பதவி விலகினார் பசில்!! அரசியல் செயற்பாடுகளை தொடர்வேன்!!


 சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்சா தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து பதவி விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று கையளித்தார்.

தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக வேண்டும் என்பது எனது நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தாலும் அரசியல் செயற்பாடுகளை தொடர்வேன். அரச நிர்வாகம் வேறு, அரசியல் வேறு. நாடாளுமன்றத்திற்கு இப்போது நான் தேவையில்லையென நினைக்கிறேன் என்றார்.

நபர்களை மாற்றாது அரச பொறிமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதையே பலர் எதிர்பார்க்கின்றனர். எனினும் இதுவரை காலமாக நபர்களை மாற்றுவதையே முன்னெடுத்துள்ளோம். இனியாவது நபர்களை மாற்றாது பொறிமுறை மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.

No comments