ரணிலை கழற்றிவிட தயாராகும் பெரமுன!ரணிலை முன்னிறுத்தி மக்கள் எதிர்ப்பலைகளை சமாளித்த பெரமுன தரப்பு தற்போது அவரை கழற்றிவிட தயாராகின்றது.

ரணில் விக்ரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (21) ஜனாதிபதியை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் குழு கூட்டத்தில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் ஜனாதிபதி அதற்கு பதிலளிக்கவில்லை.

No comments