எரிபொருள் பற்றாக்குறை:கனேடிய தூதரும் ரயிலில்!


இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், தொடரும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ரயிலில் யாழ்ப்பாணம்  சென்றுள்ளார்.

உயர்ஸ்தானிகர் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் மேயர் வி.மணிவண்ணன் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேலும் வட மாகாணத்தின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments