ரணில் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம்!

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் எதிராக அவரது வீட்டுக்கு முன்னால் சஜித் அணியினர் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பேராட்டகாரர்கள் பிரதமர் தங்களை சந்திக்கும் வரை குறித்த இடத்தை விட்டு செல்லமாட்டோம் என தெரிவித்துள்ளார்கள்.

போராட்டம் காரணமாக ரணில் விக்கிரமசிங்கவின் வீடு அமைந்துள்ள கொழும்பு பிளவர் வீதியின் 5 ஆம் ஒழுங்கை மூடப்பட்டது.

போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் பலர்  கலந்துகொண்டுள்ளனர்.


No comments