விசயகலாவை சந்தித்த நீதியமைச்சர்!



யாழிற்கு விஜயம் செய்யும் அரசியல்வாதிகளை தனது வீட்டிற்கு விருந்தளிப்பது முன்னாள் அமைச்சர் விசயகலாவின் வழமை.

கடந்த வெள்ளிக்கிழமை யாழிற்கு விஜயம் ஒன்றை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேற்கொண்டிருந்த நிலையில் அவரும் விசயகலா வீட்டிற்கு பயணித்துள்ளார். 

இந்து பௌத்த கலாசார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ் இராமச்சந்திரனின் அழைப்பையேற்று சிங்கள மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார்.

இத்துடன் நாளை திங்கட்கிழமை வறணி சுட்டிபுர அம்மன் ஆலய தேர் திருவிழாவிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழில் தங்கியுள்ள நிலையில் விஜயதாச ராஜபக்ச முன்னாள் அமைச்சர் வீட்டிற்கும் சென்றுள்ளார்.


No comments