யாழில் மிளகாய் ஆயிரம்

மரக்கறிகளிற்கான தட்டுப்பாட்டால் சந்தைகள் திணறிவருகின்றன.

யாழ்ப்பாண சந்தைகளில் ஒரு கிலோ கறிமிளகாய் ஆயிரம் ரூபாவிற்கும் கரட் 600 விற்கும் சென்றுள்ளது.

எனினும் நீர்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ வாழைக்காய் பத்து ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படாதுள்ளது.

தென்னிலங்கை வியாபாரிகள் எரிபொருள் இன்மையால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தராமையால் இத்தகைய நெருக்கடி தொடர்கின்றது.

இதனிடையே  எரிபொருள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பலருக்கு பல வாரங்களாக டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையும் அதன் விளைவாக  தமது உற்பத்திகளை பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பல மொத்த வியாபாரிகள், அன்றாடம் பொருளாதார மையங்களில்  இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்,

அதே நேரத்தில், மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயர்வால் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மரக்கறிகளின் விலை அதிகமாக இருப்பதால், வழக்கமான கறிகளை உணவில் சேர்ப்பதில் சிரமம் இருப்பதாக சில நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

No comments