மக்கள் சோத்துக்கு திண்டாட்டம்:ஆட்சியாளர்கள் யோகாவில்!

பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்கள் வரிசையில் நிற்கும்போது  குளிரூட்டி இயந்திரங்களை வைத்துக் கொண்டு யோகா செய்து கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்கம் மக்கள் படும் துன்பங்களை மூடி மறைத்து  தமது இருப்பை பலப்படுத்தவே முயற்சிப்பதாக சஜித் பிரேமதாச  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

மக்கள் தங்கள் சொந்த சுமைகளையும், நாட்டை அழிக்கும் அரசியல்வாதிகளின் சுமைகள் என இரு சுமைகளையும் சுமக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. மக்களின் துன்பங்களை புரிந்து கொள்ளாத அரசாங்கம் மக்களின் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. 

அரசாங்கத்திடமிருந்து மக்கள் தீர்வுகளை எதிர்பார்க்கிறார்களேயன்றி, தீர்க்க முடியாத குறைகளை அல்ல. இருந்தபோதிலும், இரண்டு வருட ஆட்சியின் கீழ் மக்கள் அரசியல் நாடகங்களை மட்டுமே மரபுரிமையாக பெற்றுள்ளனர் என்றார்.

No comments