டக்லஸ் செய்ய வேண்டியது?



தற்போதைய இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து  மீள டக்ளஸ் செய்யவேண்டியவற்றை பட்டியல் இட்டுள்ளார் கல்வியிலாளர் ஒருவர். டக்லஸ் தேவானந்தா  செய்ய வேண்டியது:

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் வியாபாரம் மூலம் சம்பாதித்த  நான்காயிரம் மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அரசாங்கத்திடம் மீள செலுத்த வேண்டும் 

பசில் ராஜபக்சே அவர்களின் முதலீட்டுடன்   யாழ்ப்பாண மற்றும் கொழும்புக்கு இடையில் நடத்தபட்ட சொகுசு பஸ் வண்டி சேவையில் உழைத்த கோடிக்கணக்கான பணத்தை திறைசேரியிடம் வழங்க வேண்டும் 

யாழ்ப்பாண ஈ பி டி பி அலுவலகத்திற்கான முழு மின்சார நிலுவை கட்டணமான  97 லட்சத்து 16 ஆயிரத்து 120 ரூபா 40 சதம் பணத்தை உடனடியாக மீள செலுத்த வேண்டும் 

டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, லேயாஸ் வீதியிலும் சொந்தமாக இருந்த வீடுகளுக்கான தண்ணீர் கட்டணம 1 கோடியே 19 இலட்சத்து 88 ஆயிரத்து 267 ரூபா 95 சதம் மீள செலுத்த வேண்டும் 

மாநகர சபைகள் கட்டளை சட்டத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட விதிகளுக்கும் முரணாக கஸ்தூரியார் வீதியில் கட்டடப்பட்ட  கட்டடத்தில் திருடிய கோடிக்கணக்கான பணத்தை அரச திறைசேரிக்கு மீள செலுத்த வேண்டும் 

யாழ்ப்பாண நகரில் ஈ பி டி பி அமைப்பு தங்களுக்கு சொந்தமான DD தொலைக்காட்சி நிறுவனத்தையும் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தையும் சட்டவிரோதமாக நடத்தியன் மூலம் ஏற்பட்ட இழப்பை அரசாங்கத்திற்கு மீள செலுத்த வேண்டும் 

யாழ்ப்பாண மாநகரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக 430 பேரை நியமனம் செய்து மாதம் தோறும் 6 மில்லியன் ரூபா பணத்தை அதாவது ஆண்டுக்கு 72 மில்லியன் ரூபா பணத்தை மாநகர சபைக்கு மீள செலுத்த வேண்டும் 

சட்டவிரோத மேற்கொள்ளப்பட்ட தொண்டராசிரியர் நியமனங்கள் , சுகாதார ஊழியர் நியமனங்கள் போன்ற அரச நியமனங்களால் ஏற்பட்ட கோடிக்கணக்கான அரச நிதி இழப்பை திறைசேரிக்கு மீள வழங்க வேண்டும் 

அதிகாரத்தில் இருந்தபோது அபகரித்த பிரதேச மற்றும் நகர சபைக்களுக்கு சொந்தமான வாகனங்களை மீள அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் 

அரச படைகளுடன் உதவியுடன் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி கொலை செய்து வசூலித்த கப்ப பணம் மீள பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்க வேண்டும் 

வடக்கு கடலில் இழுவை மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள ஓவருவரிடமும் கப்பமாக பெறப்படும் 5,000 ரூபா பணம் மீள வழங்கப்பட வேண்டும் 

ஸ்ரீதர் திரையரங்கு உட்பட பொதுமக்களிடம் அபகரிக்கப்பட்ட தனியார் சொத்துக்கள் மற்றும் அதற்கான இழப்பீடுகள் உடனடியாக வழங்க வேண்டும் 

1990 ஆம் ஆம் ஆண்டு முதல் அப்பாவி பொதுமக்களை காட்டி கொடுப்பதற்காக அரச பாதுகாப்பு அமைச்சில் துணைப்படையாக செயல்பபட்டு சம்பளமாக பெற்ற கோடிக்கணக்கான பணத்தை உடனடியாக மீள செலுத்த வேண்டும் 

வீதி புனரமைப்பு உட்பட அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதன் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்ட  கோடிக்கணக்கான பணத்தை மீள வழங்க வேண்டும் 

கோவில் புனரமைப்பு என்கிற பெயரில் முறைகேடான காசோலை மோசடிகளில் ஈடுபட்டு உழைத்த பல கோடி பெறுமதியான அரச பணத்தை மீள செலுத்த வேண்டும் 

சட்டவிரோத விபச்சார தொழிலில் வறுமை கோட்டுக்குள் வாழும்  பெண்களை ஈடுபடுத்தியன் மூலம் சட்டவிரோதமான முறையில் உழைத்த பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் 

இது மாத்திரமின்றி தீவகத்தில் மாடு கடத்தல் தொடக்கம் இருப்பு வியாபாரம் வரை சகல சட்டவிரோத வியாபார முயற்சிகளில் உழைத்த பணத்தை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் 

மேற்குறித்த பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலம் இலங்கையின்   பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண டக்லஸ் தேவானந்தா  உதவ முடியும் 

அதே போன்று செய்த பாவங்களுக்கு எதோ ஒரு வடிவில் பரிகாரமும் காண முயற்சிக்கலாம் 

மாறாக பொருளாதார நெருக்கடிகள் குறித்த எந்த விளக்கமும் இன்றி காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்குமதி செய்வதன் மூலம் ஒரே இரவில் நெருக்கடிகளை தீர்க்கலாம் என கதை சொல்லுவதால் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி இருக்கும் மக்களுக்கு எந்த தீர்வும்  கிடையாது

No comments