இலங்கை அரிசியில்லை:மூடப்படும் ஆலைகள்!


இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகள் பெருமளவு மூடப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

நாட்டில் சுமார் 3,000 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகள் இருந்ததாகவும் தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 700 ஆகக் குறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இரசாயன உரத்தை தடை செய்வதாக கடந்த காலத்தில் அரசு எடுத்த கொள்கை முடிவு, இலங்கையின் விவசாயத்துறையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் பலர் விவசாயத்தையே கைவிட்டனர் இதன் விளைவாக விளைச்சல் குறைந்துள்ளது. அத்தோடு இந் நெருக்கடி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.No comments