ஈழத்தின் கீழடி:காரைநகரின் காரைக்கால்!ஈழத்தின் தொல்லியல் ஆய்வில் முக்கிய திருப்புமுனையினை காரைநகரின் காரைக்கால் சிவன் கோயில் வழங்கியுள்ளது.நேற்று செவ்வாய்கிழமை தோண்டப்பட்ட புனித குளத்தின் அகழியில் இருந்து சீனர்களின் (கி.பி. 11-13 ஆம் நூற்றாண்டு) ஆம்போரா துண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கோயில் வளாகத்தின் அறிவியல் கலாச்சார வரலாற்றைக் கண்டறிய நாம் பின்னோக்கி அல்லது முன்னோக்கி நகர்த்தக்கூடிய தரவுக் கோட்டைத் தீர்மானிக்கும் திடமான கண்டுபிடிப்பு இதுவாகுமென தொல்லியலாளர் கிருஸ்ணராசா தெரிவித்துள்ளார்.

இதே பொருள் கோப்பாய் மற்றும் மயிலிட்டி துறைமுகப் பகுதியிலிருந்தும் 2019 இல் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டது. 

இவ்வாறாக, நல்லூர் இராச்சியம் வளர்ந்து வந்த இடைக்காலத்தில் இணுவில் மற்றும் காரைக்கால் பகுதிகள் வர்த்தக மையங்களாக வளர்ந்தன என்பது உண்மை. 

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் எமது மாணவராகப் பட்டம் பெற்ற இணுவிலைச் சேர்ந்த திரு. சேயோன் அவர்களின் இஸ்லாமிய நாணயத்தின் கண்டுபிடிப்புடன் இந்த வரலாற்று உண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதெனவும் கிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.


No comments