மோசடி தொழிலதிபர் அமைச்சராகிறார்! முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா புதிய அமைச்சரவையில் அமைச்சராக  பதவியேற்க உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் இருந்து விலகுவதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா பதவியேற்க உள்ளார்.

தம்மிக்க பெரேரா பாராளுமன்றத்துக்கு வந்ததன் பின்னர் அவர் பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள அரச வங்கிகளில் மோசடி செய்ததாக தம்மிக்க மீது சாணக்கியன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments