தென்னிலங்கையில் தொடங்கிய கொலை கலாச்சாரம்?தென்னிலங்கையில் மீண்டும் முன்னெடுக்கப்படும் கொலைகள் கோத்தா வடகிழக்கில் முன்னெடுத்து கொலைகளது தென்னிலங்கை தொடர்ச்சியாவென சந்தேகம் எழுந்துள்ளது.

இன்று காலை மொரகல்ல அளுத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கனவே கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிந்துள்ளனர்.

இந்நிலையில் நாள் தோறும் நடந்துவரும் துப்பாக்கி சூடுகள் கோத்தாவின் கொலைக்கலாச்சாரம் தென்னிலங்கைக்கும் பரவியுள்ளதாவென்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.


No comments