காணி பிடிக்கிறேன் துரைமாரே!

 


நாட்டில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடி மக்கள் வீதிகளில் திண்டாடினாலும் தெற்கு ஆட்சியாளர்கள் வடகிழக்கில் தமது படை பிரசன்னத்தை பேணுவதில் மும்முரமாகவே உள்ளனர்.

ஏற்கனவே வடகிழக்கில் முப்படைகளிற்கான காணிகளை கைப்பற்றுவதில் முனைப்பு காண்பித்து வருகின்ற நிலையில் வலிகாமம் வடக்கில் கடற்படையினர் சீமெந்து தூண்கள் சகிதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் காணிகளை வேலியிட்டு பலப்படுத்துகின்றனர்.

வலிகாமம் வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் அடாத்தாக கைப்பற்றி வைத்திருக்கும் காணிகளின் எல்லைகளை நிரந்தரமாக பலப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினர் ஈடுபடுகின்றமை தொடர்பில் மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
No comments