தென்னை வீழ்ந்து மாணவர்கள் படுகாயம்!


தென்னிலங்கையில்  பாடசாலையில் விஞ்ஞானக் கூடமொன்றின் மீது தென்னைமரமொன்று விழுந்ததில், மாணவர்கள் ஒன்பது பேர் உட்பட ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன்,வெலிமட இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த மிகப்பழமையான தென்னை மரம் ஒன்று முறிந்து, வகுப்பறையின் மீது விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

No comments