இலங்கையில் காஸ்:பறபறக்கிறது!இலங்கையின் எரிவாயு விலைஇவ்வாண்டினில் நாலாவது தவையாக மீண்டும் அதிகரிக்கவுள்ளது.

தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு, முந்தைய விநியோ கஸ்தரான ஓமானிடம் இருந்து எரிவாயு வாங்கத் தயாராகி வருவதே இதற்குக் காரணம்.

ஒரு தொன் ஜெம் மெட்ரிக் தொன்னுக்கு சியாமை விட 34 அமெரிக்க டொலர் அதிகமாக ஓமான் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டியுள்ளது. இது எரிவாயு விலையில் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

ஓமானிலிருந்து எரிவாயு வடிகட்டப்பட்ட பிறகு, எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.1000 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண வீட்டு எரிவாயு சிலிண்டரினால் ஏற்கனவே 2500 ரூபா நஷ்டம் ஏற்படுவதாக லிட்ரோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

No comments