இலங்கை:எரிபொருளை பாதுகாக்க 50ஆயிரம் ஆமி!

 


இலங்கையில் இராணுவ இருப்பினை பேணியமை கோத்தபாயவிற்கு தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளது.எரிபொருள் பற்றாக்குறையால் அதிகரித்து வரும் பதற்றம் இலங்கை முழுவதும் காணப்படுகிறது. நேற்று நாவல பகுதியில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாக ஊடகவியலாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விகிதத்தில் இலங்கை முழுவதுமுள்ள எரிபொருள் நிலையங்கள் 1050 இனை பாதுகாக்க 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவம் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த நோக்கங்களுக்காக துருப்புக்களை இலங்கை முழுவதும் நிலை நிறுத்தினால் வட-கிழக்கில் இராணுவமயமாக்கலை சாதாரண மட்டத்திற்கு கொண்டு வர முடியுமென கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.No comments