மன்னார் இந்தியாவிற்கா? கொதிக்கும் சிங்களம்!

மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் பிரயோகித்திருந்த விடயம் தென்னிலங்கை சிங்கள அரசியல் பரப்பில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதன் பின்னர், பதவி விலகிய இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் இன்று முற்பகல் 11 மணியளவில் அந்த குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின்போது, முன்னிலையாகி இருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் பிரயோகித்திருந்த விடயத்தை அம்பலத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.No comments