நாடாளுமன்ற அன்னதானம்:நாளை முடிவு!
இலங்கை நாடாளுமன்றில் சர்ச்சைக்குரியவகையில் உணவு அள்ளி வழங்கப்பபடுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக நாளை தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டமொன்று நாளை  இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தீர்மானிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போதே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பாக  தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments