ஆஸ்ரேலிய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கித்துவம்


ஆஸ்திரேலியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி அல்பேனிஸ் வெற்றிபெற்று கடந்த மாதம் 23 ஆம் தேதி பிரதமராக பொறுப்பேற்றார்.

இன்று பொறுப்பேற்றுக்கொண்ட அவரது அமைச்சரவையில் மொத்தம் உள்ள 23 பேரில் பெண்கள் 10 பேர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆட்சியில் அதிகபட்சமாக 7 பெண்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். 

No comments