நிலாவின் தாயார் பிரிந்தார்!இலங்கை அரச புலனாய்வு பிரிவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட  ஊடக கற்கை மாணவனான சகாதேவன் நிலக்சனின் அன்னையார் தனது மகனிற்கான நீதி கிட்டாத நிலையில் உயிர் பிரிந்துள்ளார்.

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை முன்னாள் அதிபரும், கொக்குவில் இந்துக்கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவியும், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் , கொக்குவில் இந்து முன்பள்ளியோடு நெருங்கிய தொடர்புடையவரும் ஆகிய திருமதி செல்வராணி சகாதேவன் இன்று கொக்குவிலில் இறைபதம் அடைந்துள்ளார்.

தனது படுகொலையான மகனிற்காக நீதி கோரி போராடி வந்திருந்த நிலையில் அவர் பிரிந்துள்ளார்.

2007ம் ஆண்டில் கொக்குவிலில் உள்ள வீட்டினில் வைத்து நிலக்சன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.No comments