கிளிநொச்சியில் அகப்பட்ட நட்சத்திர ஆமை



கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காண்பவரை கவரும் இந்த ஆமை வகை இந்தியா, இலங்கை, பாகிஸ்தானில் காணப்படும் உயிரினமாகும். இந்த நட்சத்திர ஆமைகள் இந்திய மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளில் அதிகளவில் உள்ளன. உலகம் முழுவதும் ஆமை வளர்ப்பாளர்களால் அதிகம் விரும்பப்படும் இந்த ஆமைகள் அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

இந்த ஆமைகள் சீனா, ஹாங்காங், தாய்லாந்து பகுதிகளில் மருந்து தயாரிப்புக்காகவும் மற்றும் வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர ஆமைகளின் ஓடுகளுக்கு மருத்துவக் குணம் இருப்பதாக அங்கு நம்புகின்றனர். 

ஆமையின் ஓட்டினை பொடியாக்கி உணவில் கலந்து சாப்பிட்டால், ஆண்மை அதிகரிக்கும் என சீனர்கள் நம்புகின்கின்றனர். இந்தியாவிலுள்ள நட்சத்திர ஆமைகள்தாம் இதில் சிறந்தவை என கூறப்படுகிறது. இதனால் நல்ல விலைக்கு இந்த ஆமைகளை சர்வதேச சந்தையில் வாங்குகிறார்கள். 

இதனால் ஆண்டுதோறும் கடத்தல் சட்ட விரோத வணிகம் அதிகரித்து வருகிறது. ஒரு நட்சத்திர ஆமையின் விலை 500 டாலரிலிருந்து 2 ஆயிரம் டாலர் வரை சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



No comments