வடமராட்சியில் மீனவர்கள் திரும்பினர்!



யாழ்ப்பாணம் - வடமராட்சி, சக்கோட்டையிலிருந்து நேற்றைய தினம் கடற் தொழிலுக்குச் சென்ற காணாமல் போயிருந்த நான்கு மீனவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

மோசமான எரிபொருள் தட்டுப்பாட்டினால் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளது.

முன்னதாக மோசமான பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ள நிலையில் கறுப்புச்சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்து தொழிலிற்கு சென்ற மீனவர்களே காணாமல் போயிருந்தனர்.

குறிப்பாக எரிபொருள் இன்மையால் காணாமல் போனவர்களை தேடுவதற்கான பணிகளில் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட முடியாதிருந்ததாக மீனவ சங்க தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று காலை இயந்திரபடகு செயலிழந்த நிலையில் மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

No comments