யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளை காணோம்!மக்கள் வீதிகளில் அலைந்து திரிகையில் தமிழ் அரசியல்வாதிகள் பலர் காணாமல் போயுள்ளதாக  தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று கருத்து தெரிவிக்கையில், மக்கள் வீதிகளில் நிற்கின்றார்கள் ஆனால் எரிபொருள் விநியோகம் எப்போது என தெரியாது. ஆனால் எமது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் காணவில்லை. 

மக்கள் வரிசைகளில் காணப்படும்போது இன்று வரைக்கும் எந்த ஒரு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களை சந்தித்ததாக தெரியவில்லை. மக்களுடைய ஆதங்கங்களை புரிந்துகொண்டு கொண்டு அவர்கள் செயற்பட வேண்டும். உங்களால் அந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனாலும் கூட மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக கூட மக்களுடன் களத்தில் இறங்கி இருக்க வேண்டும் எனவும் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

No comments