வவுனியா:குளத்தில் மூழ்கி இன்றும் இருவர் மரணம்!

 


வவுனியா ஈரப்பெரிய குளத்தில் நீராடிய மாணவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.மேலும் இருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஈரப்பெரிய குளத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை 15 மற்றும் 16 வயதுகளையுடைய நான்கு மாணவர்கள் நீராடிய நிலையில் ,அவர்கள் நால்வரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்க முயன்ற போதிலும் அவர்களில் இருவர் உயிரிழந்த சிலையில் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர்.மற்றைய இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே இம்மாதத்தின் முற்பகுதியில் முல்லைதீவு அலம்பில் கடற்பரப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.


No comments