அடி அகோரம்:பஸில் ராஜினாமா!

 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது.

அவருடன் இரட்டைக் குடியுரிமை கொண்ட இரண்டு எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அமைவாக இது மேற்கொள்ளப்படும் எனவும், இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

குறிப்பாக 21வது திருத்தத்திற்கு தடையாக உள்ள பசில் ராஜபக்ச மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் வகையில், ராஜினாமா செய்யவுள்ளதாக  செய்தி வெளியாகியுள்ளது.

No comments