6 பொலிஸ் காயம்:10 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுதென்னிலங்கையின் அதுருகிரிய பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் நேற்றிரவு(17) ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை கட்டுப் படுத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  வாகனச் சாரதிகளுடன் மோதலில் ஈடுபட்டதில் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந் துள்ளனர்.

காயமடைந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 10 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

எரிபொருள் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கப் பட்டதையடுத்து, ஒரு குழுவினர் கட்டுக்கடங் காமல், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பு வேலியை உடைக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சில வாகனச் சாரதிகளை பொலிஸார் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் இருப்புகள் தீர்ந்ததை அடுத்து மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

வரிசையில் காத்திருந்து எரிபொருள் கிடைக்காத சிலர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை சேதப்படுத்த முயற்சித்துள்ள நிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு கலவரமானது.


No comments