எரிவாயு வேண்டும்: ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து மக்கள் போராட்டம்

வவுனியாவில் பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிவாயு விநியோக நிலையத்தில் எரிவாயு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து நிலையில் எரிவாயு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. 

இதனால் குழப்பமடைந்த மக்கள் கோபமடைந்து ஏ9 நெடுஞ்சாலையை வழிமறித்து எரிவாயு சிலிண்டர்களை வைத்துப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராட்டம் அரை மணி நேரம் நீடித்தது. வீதிப்போக்குவரத்துகள் பாதிப்படைந்தன.

போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குக் வந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் அங்கிருந்த சிலிண்டர்களையும் போராட்டக் காரர்களையும் அகற்றியுள்ளனர். இதன்போது பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

No comments