மேலும் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!


புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 9 பேர்  ஜனாதிபதி கோட்டாபாய முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

 நிமால் சிறிபால டிசில்வா துறைமுகம் கப்பல்துறை மற்றும் விமானத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

◾ சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்

◾ கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

◾ விஜயதாஸ ராஜபக்ஷ நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

◾ ஹரீன் பெர்னாண்டோ சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

◾ ரமேஷ்பத்திரண கைத்தொழில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

◾ மனுஷ நாணக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

◾ நளீன் நூவ ஜீவ பெர்னாண்டோ வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சராக சந்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

◾ டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

No comments