வடமராட்சியில் மயங்கி வீழுந்த சிறுவன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். 

துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். 

குறித்த சிறுவன் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் , வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான். 

அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

No comments