பசி! பசி!!-இலங்கை மாணவர்கள்?

 


இலங்கையில் பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாடசாலை அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 புத்தகங்கள், காலணிகள், சீருடைகளின் விலைகள் 200விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் அதிபர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

காலையில் பாடசாலைக் கூட்டத்தின் போது மாணவர்கள் மயங்கி கீழே விழுந்ததாகவும் அவர்கள் காலை உணவை உட்கொள்ளாதது தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வகுப்பில் நான்கைந்து மாணவர்கள் பட்டினியுடன் பாடசாலைக்குச் வருகை தரும் நிலை நிலவியது.

தற்போது பொருளா தார நெருக்கடியால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமல் பெற்றோர் திணறுவதால் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.


No comments