நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளிப்பு


அரசாங்கத்துக்கு எதிராகவும் ஜனாதிபதிக்கு எதிராகவும்  இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (03) சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம்  கையளித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையிலான குழுவினரே  இவ்வாறு இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை  சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.    

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அடையாளமான ரீதியானதே தவிர சட்டரீதியானது அல்ல என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments