யேர்மனி சார்புறுக்கனில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது

சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது.

இதன்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களுக்கு நகரமத்தியில் தீபம் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வானது யேர்மனியில் 4.5.2022 இல் இருந்து 18.5.2022 வரை முக்கிய நகரங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments