மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அடைக்கல் பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை (21.05.2022) இடம் பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்சேனை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (40) வயதுடைய வடிவேல்-குணராசா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து அடைச்சகல் பிரதேசத்திற்கு மேச்சலுக்கு சென்ற தனது மாடுகளை அழைத்து வரச்சென்ற போது மறைந்திருந்த யானை தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பின்னர் அயலில் மீனிபிடியில் ஈடுபட்டவர்கள் சம்பவத்தை கண்டபின்னர் குறித்த நபரின் உடலை சம்பவ இடத்தில் இருந்து மீட்டெடுத்து வீட்குக்கு கொண்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

No comments