புதிய அமைச்சரவையில் அமைச்சரல்ல!இலங்கையின் புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சு பதவியையும் ஏற்கப்போவதில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு சாதகமான அரசாங்கத்தின் எந்த கொள்கையையும் வெளிப்படையாக ஆதரிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சாதகமான அரசியல் மாற்றங்களை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எரிசக்தி அமைச்சர் பதவியை ஏற்பதற்கு சம்பிக்க ரணவக்க தயார் என்றால் அவருக்கு ஆதரவளிக்க தயார் என அமைச்சர் காஞ்சனவிஜயசேகர தெரிவித்திருந்தார்.

அந்த அமைச்சிற்கு தலைமைதாங்குவதற்கு சம்பிக்க ரணவக்கவே பொருத்தமானவர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

பொருத்தமான நபருக்காக எனது பதவியை விட்டுக்கொடுக்க தயார் திட்டங்கள் யதார்த்தபூர்வமானவையாக மாறுவதற்கு உதவ தயார் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹரீன்பெர்ணான்டோ மனுசநாணயக்கார தங்கள் அரசியல் எதிகாலத்தை பணயம் வைத்து நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments