மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டமும் வழமை மறுப்புப் போராட்டமும்


மன்னாரில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற வழமை மறுப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மக்கள் இன்று (6) காலை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் என பலரும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காலை 9.30 மணியளவில் நெடுங்கண்டல் சந்தியில் ஆரம்பமான ஊர்வலம் மாந்தை மேற்கு பிரதேச செயலக வீதியை சென்றடைந்தது.இதன் போது கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே போன்று தற்போது நிலவும் பொருளாதார நெருக்டிக்கு தீர்வு காணவும் அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துமாறு வலியுறுத்தி மன்னாரில் வழமை மறுப்பு போராட்டம் நடைந்துள்ளது. மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதுடன் தனியார் பேருந்து சேவைகளும் இயங்கவில்லை.அதே நேரம் பொது இடங்களில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்பு  கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

No comments