நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் கிளிநொச்சியில் ஆரம்பம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய நடை பயணம் நேற்று கிளிநொச்சியை வந்தடைந்து.  

இன்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் பரந்தனில் காலை 9 மணிக்கு ஆரம்பமான நடை பயணம் பூநகரி ஊடாக வெள்ளாங்குளம் சென்று மல்லாவி ஊடாக குறித்த பயணம் மாங்குளத்தை இன்று மதியம் அடையவுள்ளது.

இதேநேரம் கிழக்கில் இருந்து பயணிக்கும் குழுவினருடன் இணைந்து மீண்டும் முறிகண்டி, கிளிநொச்சி, பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று முள்ளிவாய்க்காலை சென்றடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments