மரியுபோலில் 22,000 பொதுமக்கள் உயரிழப்பு!


உக்ரைனின் தென்கிழக்கு துறைமுக நகரமான மரியுபோலில் கடந்த மூன்று மாதங்கள் நடந்த உக்கிர சண்டையில் குறைந்தது 22,000 உக்ரைனிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் செய்திகள் வெளியாகியுள்ளன.

மரியுபோல் மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ உக்ரைனிய பகுதிக்குள் தப்பியோடிய பின்னர் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கையில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

அங்கு தற்போது வசிக்கும் உக்ரைனின் அதிகாரிகளின் தகவல்களின் அடிப்படையில் இக்கணக்கு கணக்கிடப்பட்டது என்றார். உண்மையான இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

மீட்கப்பட்ட உடல்களை பிணவறைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ரஷ்யாவின் வலியுறுத்தலால் கொல்லப்பட்டவர்களை அடக்கம் செய்யும் செயல்முறை சிக்கலாக உள்ளது என்றார்.

கொல்லப்பட்டவர்கள் உக்ரேனிய இராணுவத்தால் கொல்லப்பட்டதாக விண்ணப்பதாரர் கூறும் காணொளிப் பதிவு செய்ய ஒரு உடலைக் கோரும் நபர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஆண்ட்ரியுஷ்செங்கோ கூறினார். 

இதேநேரம் ரஷ்யத் தாக்குதல்களில் உருக்குலைந்து எலும்புக்கூடுகள் போன்று காட்டிதரும் கட்டங்களுக்குள் பெருமளவானோர் கொல்லப்பட்டடிருக்காலாம் என நம்பப்படுகிறது.

அந்தவகையில் கட்டடம் ஒன்றிலில் 200க்கு மேற்பட்ட எலும்புகூடுகளுடன் சடலங்கள் காணப்படுவதாக செய்திகள் நேற்று வெளியாகியுள்ளமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

No comments