புதினைக் கொலை செய்ய சதி: மயிரிழையில் உயிர் தப்பினர்!


ரஷ்ய அதிபர் புதினை படுகொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு சதி நடைபெற்றதாக உக்ரைன் உக்ரைன் புலனாய்வுத்துறையின் தலைவர்   கைரிலோ புதானோவ் தெரிவித்துள்ளார்.

இந்த சதியில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். பத்திரிகைக்கு பேட்டியளித்த உக்ரைன் புலனாய்வுத்துறையின் தலைவர் கைரிலோ, புதினைக் கொல்ல நடந்த சதி பற்றி தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

காகசஸ் (Caucasus) கருப்புக் கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் உள்ள பிராந்தியம் ஆகும்.

இதில் ஆர்மேனியா, ஜோர்ஜியா, ரஷ்யாவின் சில பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. காக்கசஸ் பிரதிநிதிகள் சிலரால் புதினைக் கொல்ல சதி நடந்ததாக உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார். 

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது வயிற்றில் இருந்து திரவத்தை அகற்ற சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

No comments