வடக்கில் குளத்து மீனுக்கும் கிராக்கி!



இறுதி யுத்த காலத்தில் கூட இல்லாத அதிசயமாக வன்னியின் குளத்து மீன்கள் கிலோ ஆயிரத்து 400 இனை தாண்டி சாதனை நடந்துள்ளது.

வடக்கில்; மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக நம்பியுள்ள மக்கள் தற்போது தொழிலுக்கு செல்வதற்கு மண்ணெண்ணெய் இல்லாததால் பாரிய சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை முதல் கொக்குளாய் வரையான கடற்பரப்பில் 2,000 மீன்பிடிப் படகுகளுக்கு   மண்ணெண்ணெய் விநியோகம் என  தெரிவு செய்யப்பட்டுள்ள போதும் மண்ணெண்ணெய் சுமார் 18 நாட்களுக்கு மேலாக கிடைக்காததன் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக விலை கொடுத்து இரவு நேரங்களில் மண்ணெண்ணையை  பெற்றுக் கொள்பவர்கள் சட்டவிரோதமாக 400 ரூபா வரையில் மண்ணெண்ணையை   விற்பனை செய்கின்றனர்  என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 400 பேருக்கும் முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 800 பேருக்கும் நாயாறு   எரிபொருள் நிலையத்தில் 800 பேருக்கும்  என இந்த எரிபொருள் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 18 நாட்களாக எரிபொருள் இல்லை. இதனால்  அனைவருக்கும்  இவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது 400 ரூபாய்க்கு கூட  மண்ணெண்ணை வாங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் வன்னி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கடல் மீன்களிற்கான தட்டுப்பாட்டையடுத்து குளத்து மீன்களிற்கு கிராக்கி அதிகரித்துள்ளது.


No comments