உக்ரைன் துறைமுகங்கள் முற்றுகை: பொருட்களின் விலைகள் மேலும் உயரலாம் என எச்சரிக்கை


உக்ரைனிய துறைமுகங்களை தொடர்ந்து ரஷ்யாவால் முற்றுகையிட்டு தடுத்து வைத்துள்ளதால் முக்கிய பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் உள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் புலனாய்வுத்துறை மாநாட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து ஒடேசாவிற்குள் அல்லது வெளியே குறிப்பிடத்தக்க கப்பல் போக்குவரத்து எதுவும் இல்லை. 

சண்டை ஏற்கனவே உலகளாவிய தானிய விலையில் மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் கடற்படை முற்றுகையின் அச்சுறுத்தல் உக்ரேனிய துறைமுகங்களுக்கு வணிக கப்பல் மூலம் அணுகலைத் தடுக்கும் அதே வேளையில், இதன் விளைவாக விநியோக பற்றாக்குறை பல முக்கிய பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சகம் மேலும் கூறியது.

No comments