சக்கர நாற்காலியில் முதல் முதல் தோன்றினார் பாப்பாண்டவர்


85 வயதான பாப்பாண்டவர் பிரான்சிஸ் முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியில் பொது நிகழ்வு ஒன்று சென்றுள்ளார்.

வத்திக்கானில் உலகெங்கிலும் உள்ள கன்னியாஸ்திரிகள் மற்றும் மத உயர் அதிகாரிகளுடான சந்திப்பின்போதே அவர் சக்கர நாற்காலியில் சென்றுள்ளார். பாப்பாண்டவர் பொதுவில் பயன்படுத்தியது இதுவே முதல் முறை என்று நம்பப்படுகிறது.

பாப்பாண்டவர் மேடையை நோக்கி ஏறக்குறைய 10 மீட்டர் தூரம் சில உதவியுடன் நடக்க முடிந்தது.

வலது முழங்கால் வலி காரணமாக அவருக்கு நிற்கவும் நடக்கவும் கடினமான நிலையில் அவர் ஒரு நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த அவர் மாதத்தில் பலமுறை செயல்பாடுகளை இரத்து செய்ய அல்லது குறைக்க வேண்டியிருந்தது.

கடந்த ஜூலை மாதம் அவருக்கு பெரிய குடல் அறுவை சிகிச்சை நடந்திருந்ததை நினைவூட்டத்தக்கது.

No comments