பிரதி சபாநாயகர் தெரிவு! என்ன நடந்தது?





பிரதி சபாநாயகர் தெரிவு, என்ன நடந்தது? என்பதை முன்னணி கொழும்பு ஊடகவியலாளர் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

சஜித் அணிக்கும் மைத்திரி அணிக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு காணப்பட்டது. 

அதாவது ரஞ்சித் சியம்பலாபிட்டியவை எதிர்க்கட்சியின் சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்குப் பரிந்துரை செய்வது.

அப்படிச் செய்தால் அவருக்கு ஆதரவளிக்கும் உறுதிப்பாட்டை சஜித் வழங்கினார் - மைத்திரி ஏற்றுக்கொண்டார். சஜித் மைத்திரி அணியை நம்பினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜகத் புஸ்பகுமார பாராளுமன்ற உறுப்பினரைப் பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமிக்க முதலில் தீர்மானிக்கப்பட்டது. 

ஆனால் சஜித் - மைத்திரி அணியின் இணக்கப்பட்டை அறிந்துகொண்ட SLPP ரஞ்சித் சியம்பலாபிட்டியவை ஆதரிக்க முடிவு செய்தது. (இங்கு மைத்திரி அணியின் டபள் கேம் செயற்பட்டிருக்க கூடும்)

சஜித் குழம்பிப் போனார். 

ஆனாலும், இப்படி ஒரு சூழ்நிலை வந்தால்  இம்தியாஸ் பாக்கீர்மாக்காரை பரிந்துரைக்க ஏற்கனவே அவரது கட்சியின் "புத்திசாலிகள் சிலரால்" முடிவு செய்யப்பட்டிருந்தது. 

அதன்படி நடந்தார் சஜித்..

வாக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, சுமந்திரன் MP ஒரு டுவீட் போட்டார். 

அந்த டுவீட்டை அப்படியே வாக்கெடுப்பு முடிந்த கையோடு சஜித் ஒப்புவித்தார். 

சஜித்தின் சாணக்கியத்தை எல்லோரும் வாழ்த்தினார்கள்.

No comments