தொல்லியலாம்:தமிழர்கள் கைது!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல், வசந்தபுரம் கிராமத்தில் தொல்பொருள் இடத்தினை அகழ்ந்து தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொதுமக்கள் இருவர் இலங்கை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நெல்களஞ்சியசாலைக்கான அடித்தளத்திற்கான மண் நிரப்பும் நடவடிக்கைக்காக அருகில் உள்ள வழிபாட்டு இடம் ஒன்றின் பகுதிகளை கனரக இயந்திரம் கொண்டு தோண்டியபோது தொல்பொருள் சிதைவுகள் காணப்பட்டுள்ளது.

தொல்பொருள் சிதைவுகளிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் வசந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் கனரக இயந்திரத்தின் சாரதி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


No comments