சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் கோருகின்றோம்


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றையதினம் (30)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறைகள் மீது நம்பிக்கை இல்லை, சர்வதேச பொறுப்புக்கூறலையும் நீதியையும் மட்டுமே நாங்கள் கோருகின்றோம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று மாலை 03 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் omp ஒரு கண்துடைப்பு நாடகம் , இராணுவத்திடம் ஒப்படிக்கப்பட்ட உறவுகள் எங்கே ?? தண்டனைக்கு விலக்களிக்கும் கலாசாரம் இலங்கையில் தொடர்கிறது . எமக்கு வேண்டும் சர்வதேச நீதிவிசாரணை, போன்ற கோஷங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.No comments