உலகின் தலைசிறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு விசா - பிரித்தானியா அறிவிப்பு


உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிரத்தியேக விசா திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது.

உலகின் தலைசிறந்த மாணவர்களை பணியமர்த்தி பொருளாதாரத்தை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் இளங்கலை அல்லது முதுகலையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 2 ஆண்டுகளும், பிஎச்டி முடித்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் விசா வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றிருக்கும் மாணவர்கள் ஸ்பான்சர்களோ, வேலைவாய்ப்பு விசாக்களோ இன்றி பணிபுரிய அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.

No comments