அண்ணாமலையை சந்தித்த ஈழம் சிவசேனை!இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சி குழுவை ஈழம் சிவசேனை சந்தித்துள்ளது.

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தம் பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை பல தரப்பினரையும் சந்தித்து பேசியிருந்தார்.

நல்லை ஆதீனம் தலைமையிலான மத தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தலைவர்களை அவர் யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்தார்.

ஈழம் சிவசேனையின் அறுவர் கொண்ட உயர்மட்ட குழு யாழ்ப்பாணத்தில் அண்ணாமலையினை சந்தித்து பேசியிருந்ததுடன் நினைவு பரிசில்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments