மொட்டில் புதிய பிரதமர்?மொட்டில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைப்பதே குறுகிய காலத்தில் நாட்டின் பிரச்சினைக்கு மிகவும் நடைமுறை யான தீர்வாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் டலஸ் அழகப்பெரும என்பது அவரது கருத்தாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் மொட்டு அதிக வாக்குகளைப் பெற்றதால், அந்தக் குழுவுக்கு பிரதமரை நியமிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிலர் தவறு செய்தது உண்மை என்றும் இதற்கு அவர்களின் ஆணவமும் முட்டாள்தனமுமே காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டார்.  இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதே தற்போது செய்யக்கூடிய சிறந்த காரியம் என்றும் கூறினார். 

இடைக்கால அரசாங்கத்துக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டவட்டமான திட்டத்தை முன்வைத்தால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகத் தயார் என டிலான் பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தப் பிரதமர் பதவி பெரிய விடயமல்ல என்றும் நாட்டுக்காக இராஜிநாமா செய்வார் என்றும் கூறினார்.

No comments