மருண்டவன் கண்ணுக்கு ஊடகவியலாளனும் பேய்!



நாடாளுமன்றத்தில் சில தனிநபர்கள் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை பதிவு செய்தனர் என வெளியான குற்றச்சாட்டடுகள் குறித்து எதிர்கட்சி தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சில பத்திரிகையாளர்களின் கையடக்க தொலைபேசிகளை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பறித்து அவற்றை ஆராய்ந்துவருகின்றார் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இது ஊடக சுதந்திரத்திற்கு எதிரான விடயம் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சபாநாயகர் தலையிட்டு அவற்றை மீளப்பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அந்நியர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தொலைபேசியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனால் சிலர் நாடாளுமன்றுக்குள் வருவதற்கு பயப்படுவதாகவும் எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு அந்த நபர்கள் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்

No comments