இனப்படுகொலையே:வடகிழக்கு ஆயர் மன்றம்

 



வடக்கு - கிழக்கு ஆயர் மன்றம் மே18 நினைவேந்தல் நாளை இனப்படுகொலை நாளாக அனுஸ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் தமிழினப்படுகொலை நாள் தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மே மாதம், சிறிலங்காவில் முரண்பாடான உணர்வுகளை தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு தமிழினப் படுகொலையில் இறந்தவர்களை நினைவுறுகையில், தெற்கு போர் வெற்றியைக் கொண்டாடுகின்றது. இறந்தவர்களை நினைவு கூருகின்ற உரிமை நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் அடிப்படையானது என்பது மதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கடந்த காலங்களில் அடக்குமுறையை பயன்படுத்தி நினைவேந்தலை படைத்துறை நசுக்கி வந்துள்ளது.

சிறிலங்கா அரசியல்,பொருளாதார நெருக்கீட்டை நீண்ட காலமாக எதிர்கொண்டு வந்துள்ளது. அமைதியான போராட்ட முறைமை சனநாயகத்தின் அடிப்படைப் பண்பு சார்ந்தது, அது ஒரு குற்றமல்ல. 

அண்மையில் அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை மிகச்சிறந்த உதாரணம்.

வடக்கு கிழக்கு ஆயர்மன்றத்தின் உறுப்பினர்களாகிய நாங்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசின் ஆதரவுடன் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை வன்மையாகக்கண்டிப்பதோடு எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மிக மோசமான நெருக்கீடு தொடர்பில் மிகுந்த அக்கறையும், கவலையும் கொண்டுள்ளோம்.

அரசியல் கட்டமைப்பு மாற்றம் தொடர்பிலான கூட்டுக் கோரிக்கை, தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் உள்வாங்க வேண்டும். இனக்குழுமங்களின் தனித்துவமான பண்புகள் தக்கவைக்கப்பட்டு போற்றப்பட வேண்டுமே தவிர அவற்றை ‘மற்றைமையாக இறைமையாக’ கட்டமைத்து பெரும்பான்மையின இருப்பிற்கெதிரான அச்சுறுத்தலாக கட்டமைக்கக்கூடாது.

உண்மையை ஏற்றுக்கொள்ளல் எதிர்காலத்தில் முற்போக்காக பயணிப்பதற்கான முதற்படி. பிரச்சினைக்கான அடிப்படை காரணியை ஏற்றுக்கொண்டு நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு அர்ப்பணிப்பு தேவைப்படுகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பொருளாதார – அரசியல் நெருக்கீட்டை தனியான உதிரியாகப் பார்க்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார – அரசியல் நெருக்கீட்டுக்கும் அரச கட்டமைப்புக்கும் இடையே அடிப்படைத் தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.அடிப்படைத் தொடர்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசினாலும் அதன் படைத்துறையாலும் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலை நாளாக மே 18 ஐ ஐ அனுஸ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் அனுஸ்டிக்குமாறு மானிடக்குலத்தை மதிக்கும் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments