வாங்கோ! வாங்கோ!! பாய்விரிக்கிறது இலங்கை!இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வெளிநாட்டவர்கள் முதலீடு செய்யும் வகையில் நீண்ட கால விசா திட்டமான கோல்டன் பரடைஸ் விசா திட்டம் நேற்று (30) அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிநாட்டவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல், வசித்தல் மற்றும் கல்விகற்றல் ஆகியவற்றிற்கு வசதியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான நீண்ட கால விசா திட்டமான ‘கோல்டன் பரடைஸ் விசா திட்டத்தின்’ அங்குரார்ப்பண விழா நேற்று (30) இடம்பெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

No comments